
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதன் மூலம் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சொத்துக்குவிப்பு வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கடந்த 24ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், தான் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் அரசியலுக்கு வந்தமையே தனக்கு இவ்வாறான வழக்குகள் வரக் காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.