லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

12.5 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,940 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 70 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,582 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 740 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவும் விலைகளை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இன்று நள்ளிரவு முதல் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கொழும்பில் இன்று(03) காலை  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews