இலங்கையில் பரவும் வைரஸ்

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும், குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews