நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நெக்டா நிறுவனத்தினால் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் அம்பன் களப்புப் பகுதியில் விடப்பட்டுள்ளன.
கடற்தொழில் அமைச்சின் 15 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் வேலைத்திட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை(08) நண்பகல் அம்பன் களப்புப் பகுதியில் இம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக ஈழமக்கள் ஜனனாயக் கட்சியின் நிர்வாகப் பொறுப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கலந்துகண்டு மீன் குஞ்சுகளை களப்புப் பகுதியில் விடுவித்தார்
இந் நிகழ்வில் அம்பன் கிராமிய மீன்பிடி அமைப்பினர் மற்றும் கிளிநொச்சி, யாழ். மாவட்ட நீரியல்வள விரிவாக்கல் உத்தியோகத்தர் கு.சங்கீதன் மற்றும் அ. முத்தழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.