யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனின் மணி விழா நிகழ்வு 04/05/2024 அன்று காலை 9:15 மணியளவில் நெல்லியடி நெல்லை முருகன் ஆலய திருமண மண்டபத்தில் ஓயவு பெற்ற ஹார்லிக் கல்லூரி அதிபரும், வட மாகாண போலீஸ் அணைக்குழு பணிப்பாளருமான ஏன். தெயவேந்திறாஜா தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக மணிவிழா நாயகன் மங்கல இசை முழங்க அமைத்துவரப்பட்டு விழா மண்டபத்தில் மங்கல விழக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வரவேற்பு உரையினை ஆய்வு கூட தொழில் நுட்ப உத்தியோகத்தர் R.அகிலன் நிகழ்த்தியதை தொடர்ந்து ஆசி உரைகளை நெல்லியடி தடங்கன் புளியடி முருக மூர்த்தி ஆலய பிரதம குரு வணக்கத்திற்க்குரிய ரங்கசாமிக் குருக்கள், பருத்தித்துறை மறைக்கோட்ட வணபிதா பருத்தித்துறை தோமை அப்பர் ஆலயம் A.F பெனற் ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து வாழ்த்துரைகளை தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் செஞ் சொற் செல்வர் ஆறு திருமுருகன், வட மாகாண பிரதம செயலாளர L. இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் செயலர் எம் பிரதீபன், வட மாகாண சுகாதார அழைச்சின் செயலாளர் எம் ஜெகூ, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளருமான வைத்திய கலாநிதி T.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மருத்து கலாநிதி கே.நந்தகுமார், ஆகியோர் நிகழ்த்தியதை தொடர்ந்து நூல் வெளியீட்டு உரைகளை ஓய்வு பெற்ற அதிபர் e. ராகவன், முகாமைத்துவ வணிக பீட முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம். நடராஜசுந்தரம்,
கோப்பாய் பிரதேச செயலர் ஏஸ்.சுவசிறி, ஓய்வு பெற்ற அதிபர் கலாநிதி எஸ் சேதுராஜா, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளர் வைத்திய கலாநிதி எம் உமாசங்கர், விழாக்குழு சார்பாக நோர்வேயிலிருந்து வருகை தந்த. எம், சிவபாலன், கரவெட்டி வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி வே.கமலநாதன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி எஸ்.குமரவேள், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி எஸ். சுதோக்குமார், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி K. செந்தூரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார சேவைகள உத்தியோகஸ்தர்கள், காணக் சபை அதிகாரிகள், நிர்வாக சேவை அதிகாரிகள், பிரதேச மக்கள், புத்திஜீவிகள், மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் நண்பர்கள் உறவினர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.