உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் உள்ள 60 நாடுகளில் வாழும் மக்களின் சராசரி தூக்கத்தின் அளவை அடிப்படையாக கொண்டு, உலகில் எந்த நாட்டில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு தூங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒவ்வொரு இரவும் சராசரியாக எந்த நகரத்தில் மக்கள் அதிகம் உறங்குகிறார்கள் என்பதை கண்டறிய ஐக்கிய இராச்சியத்தின் 40 நகரங்களில் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பல்கேரியா (Bulgaria), அங்கோலா (Angola) மற்றும் இலங்கை (Sri lanka) ஆகிய நாடுகள் உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் நகரங்களின் தரவரிசையில் நார்விச் (Norwich) நகரம் முதலாமிடத்தை பெற்றுள்ளது.