
நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப், விநாயகபுரம் மக்கள் கடந்த 21 நாட்களாக நீர் இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீர் இன்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடி அலையும் ஒரு கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாநகர சபைக்கு அன்மித்த பகுதிகளில் இவ்வாறான நிலைமையை காணப்படுகிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.