
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வராதென்ன பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (8) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
கண்டி, யடஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது நண்பருடன் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரது சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.