
இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கிடையிலான தகராற்றினால் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.