
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை மத்திய கல்லூரிக்கு இன்று (08) இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்தடி சில்வா விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் பிரதம செயலாளர்,மற்றும் மாகாண கல்விப்பணிபாளர்,வலயக்கல்வி அலுவலகத்தின் அலுவலர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது அமைச்சருக்கும் ஆசிரியர்களுக்கும் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இதில் பாடசாலைக்கு தேவையான் விளையாட்டுப்பொருட்கள் மற்றும் தளபாடங்கள் என்பன பாடசாலைக்கு தேவையாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். அமைச்சர் கூறியதாவது இது தொடர்பாக தமக்கு கடிதம் மூலம் அனுப்புமாறும் தாம் வேண்டிய உதவிகளை செய்வதாகவும்.உறுதியளித்திருந்தார்.