நாளைய நாள் உங்களுக்கு எப்படி..? சித்திரை 30, மே 13/2024 திங்கட்கிழமை.மை

*_꧁‌. 🌈 சித்திரை: 30 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் – கிழமை_ 🦜*
*_📆  13 – 05- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதரவு மேம்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️அஸ்வினி : மாற்றமான நாள்.
⭐️பரணி : ஆதாயம் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஈடேறும். உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு பெருகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️கிருத்திகை : முடிவுகள் பிறக்கும்.
⭐️ரோகிணி : ஆதரவு பெருகும்.
⭐️மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். எதிர்பார்த்த சில வரவுகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். வியாபார முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை.

⭐️மிருகசீரிஷம் : நட்பு கிடைக்கும்.
⭐️திருவாதிரை : தீர்வு காண்பீர்கள்.
⭐️புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்பு உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️புனர்பூசம் : சிந்தனைகள் மேம்ப்படும்.
⭐️பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : மதிப்பு உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
பயனற்ற செலவுகளை குறைக்கவும். திடீர் பயணங்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மகம் : செலவுகளை குறைக்கவும்.
⭐️பூரம் : அலைச்சல் ஏற்படும்.
⭐️உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் எண்ணங்களை அறிவீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். உதவி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : பக்குவம் பிறக்கும்.
⭐️அஸ்தம் : முடிவுகளை எடுப்பீர்கள்.
⭐️சித்திரை : மதிப்பு மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். விவசாய பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பணி சார்ந்த சில முயற்சிகள் கைகூடும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது அவசியம். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
⭐️சுவாதி : குழப்பம் விலகும்.
⭐️விசாகம் : லாபம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
புதியவரின் நட்பால் உற்சாகம் உண்டாகும். நுட்பமான சில விஷயங்களை அறிவீர்கள். வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபார இழப்புகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️விசாகம் : உற்சாகம் உண்டாகும்.
⭐️அனுஷம் : முயற்சிகள் மேம்படும்.
⭐️கேட்டை : நெருக்கடிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
சிந்தனைகளில் கவனம் வேண்டும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். மறதி பிரச்சனையால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். உதாசினமான கருத்துகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மூலம் : கவனம் வேண்டும்.
⭐️பூராடம் : தடுமாற்றங்கள் உண்டாகும்.
⭐️உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். குழந்தைகளால் மதிப்பு கூடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில சலுகைகள் சாதகமாக அமையும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு உயரும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️உத்திராடம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
⭐️திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️அவிட்டம் : மதிப்பு உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
கனிவான பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டு பேசுவது புரிதலை அதிகப்படுத்தும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
⭐️சதயம் : தாமதங்கள் விலகும்.
⭐️பூரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
புதிய திட்டங்கள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த எண்ணம் மேம்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கலை துறைகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️பூரட்டாதி : திட்டங்கள் நிறைவேறும்.
⭐️உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
⭐️ரேவதி : கனவுகள் பிறக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews