
நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர், பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இணைந்து இன்று காலை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.