இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்நிலை, முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் நேற்று முன்தினம் ஞாயிற்றிக்கிழமை 12/05/2024 காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரி பொதுச்சுடரினை முன்னாள் பேராளியும், முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழின் படுகொலை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ் நகரிலிருந்து ஆரம்பமானது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சின் ,முன்னாள்
உப தவிசாளர் விஜயன் , வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணி தலைவி ஜெயரஞ்சி ,சமூக செயற்பாட்டாளர். சபாஷ் ,அம்பிகை பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை தொடர்ந்து 13ஆம் திகதி திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.
இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.