![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240512-WA0064-818x490.jpg)
மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய மூத்த பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன தலைமையில், நேற்று முன்தினம் 12.05.2024 காலை சாவகச்சேரி – சரசாலை பகுதியில் வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஏராளமான பாலை மரக் குற்றிகள் மீட்கப்பட்டன.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240512-WA0063.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240512-WA0062.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240512-WA0065.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240512-WA0064.jpg)
டிப்பரில் இந்த கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். இந்நிலையில் பொலிசாரை மிரட்டி விட்டு டிப்பர் சாரதி தப்பித்து சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட மரக் குற்றிகளுடன் டிப்பர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.