யார் என்ன சொன்னாலும் இஸ்ரேல் நாட்டுக்கு வேலையாட்களை அனுப்புவதை நிறுத்த மாட்டோம்!

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சில அரசியல் குழுக்கள், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்தினை பலிக்காடாக்க முயல்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்ரேல் நாட்டினால் வழங்கப்படும் தொழில்களை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். சுமார் 40,000 பேரை அதிக சம்பளம் பெறும் தொழிலுக்கு அனுப்ப நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

அது நடந்தால் நம் கிராமத்தில் இளைஞர்கள் வெற்றிகரமான தொழிலதிபர்களாக வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

யார் என்ன சொன்னாலும் இஸ்ரேல் நாட்டுக்கு வேலையாட்களை அனுப்புவதை நிறுத்த மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews