
இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள்எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதோடு படகுகளில் சேதமாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுவதை தடுக்க கோரி இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது