திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் உட்பட நால்வரை விடுவிக்க மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவில் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி மற்றும் ஏனைய மூவர் என நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நால்வருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.