ஆளுநரும் ர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு செயற்பாடும் குருநகர் பகுதியில் இன்று (17/05/2024) நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் , வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கரையோர தூய்மைப்படுத்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
குருநகர் 26 ஆம் வட்டார கரையோர வீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்தை யாழ்ப்பாணம் முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு கழிவுகளை வீதியில் வீசுவதை தடுக்கும் வகையில், அவற்றை தரம்பிரித்து சேகரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்விலும் ஆளுநர் கலந்துகொண்டார்.