
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு சங்கானை, சுழிபுரம், மூளாய் மற்றும் அராலி பகுதிகளில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.




இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது ஏற்பாட்டில் இந்த கஞ்சி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது நினைவு ஊர்திப் பவனியும் இடம்பெற்றது.
வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.