காரைநகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வு…!

முள்ளிவாய்க்கால் நினைவு தின  நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(18) மதியம் யாழ் காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இதன் பொழுது, இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக் கிளையினரால் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும்,முன்னாள் போராளியுமான ஆண்டிஐயா விஜயராசவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் காரைநகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி, நாகராஜா, சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews