
கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில், யுத்தத்தால் இறந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று(18) காலை 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் மற்றும் பெருமளவான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன்போது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த அத்தனை உறவுகளையும் நினைவேந்தி அஞ்சலிக்கப்பட்டதுடன், சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.