
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினால் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் வட்டுக்கோட்டை துணவியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் தலைமையில் நேற்று முன்தினம் 18/05/2024 மாலை 5 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.






இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் பொதுசுடரேற்றபட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து வட்டுக்கோட்டையின் பல பகுதிகளிலும் இருந்து கலந்தூ கொண்ட மக்களால் அஞ்சலி செலுத்தபட்டது.
இதனையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கபட்டது.
குறித்த நினைவேந்தலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தன் , சிறி ஜீவா ,மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி ,ஜனா சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(சரவணபவன் உரை உள்ளது – உயிரிழந்தவர்களின் ஆன்மா கோட்டாபயாவை சுற்றுகின்றது என்று தெரிவித்தார்)