
இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.
புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார். இதன்போது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக எதிர்திசையில் புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் வேகமாக வந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீதியின் இடது கரையில் சென்ற இந்த வாகனம் வீதியின் வலதுகரையில் நின்ற யுவதியை மோதி, மரத்திலும் அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதி கவிழ்ந்தது.விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.