உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈரானின் ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலில் ஈரானின் பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளார்.
ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது முஹம்மது முக்பரின் கடமையாகும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.