
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து தடம்புரண்ட நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.




இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் பூநகரி பாலம் தாண்டி வந்துகொண்டிருந்த போது பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் பேருந்தில் பயணித்த ஆறு பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.