
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த ் 19.05.2024 குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பின் போது, அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களும் டிப்பர் வாகனமும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளார்.