
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலயு பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் பஞ்ச புராண ஓதலுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் அவர்களின் மகாபாரதம் தொடர் சொற்பொழிவு இடம் பெற்றது.

இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
