இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீஹர்வர்தன் ரிங்லா தனது மூன்று
நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கின்றார்.
வடக்குக் கிழக்கில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஐயம்
செய்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முற்போக்கு
முன்னணியையும் ரூபவ் இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் தனித்தனியாக சந்தித்து
கலந்துரையாடி இருக்கின்றார். வடக்கு கிழக்கில் கூட்டமைப்பில் இல்லாத தமிழ்த்தேசிய
அரசியல்வாதிகளை தனியாகச் சந்திக்கவில்லை. ஏனைய சிவில் அமைப்புக்களுடன்
சேர்ந்தே யாழ்ப்பாணத்தில் சந்தித்திருக்கின்றார்.
இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அண்மையில் வடக்கு கிழக்குக்கு வருகை தந்த போது
தமிழ்த்தேசியப் பரப்பில் செயற்படும் 3 தரப்பினரையும் தனித்னியாகச்
சந்தித்திருக்கின்றார். இதனால் குறிப்பாக அரசியல் தீர்வு தொடர்பாக
இந்தியா முன்வைத்திருக்கும் கருத்துக்கு மாற்றான கருத்துக்கள் பலமான நிலையில்
வெளிவந்திருந்தன. இந்தியா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஒற்றை ஆட்சி
அடிப்படையில் அமைந்த 13 வது திருத்தத்தையே சிபார்சு செய்கின்றது. இந்த 13 வது
திருத்தத்தை தமிழ் மக்களுக்கான அரசியல் தீpர்வாக எந்த தமிழ்த்தேசியக் கட்சியும்
ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்ப்பு
நிலையை சற்று அடக்கியே வாசிக்கின்றது. இதனால் மாற்றுக் கருத்துக்கள் ஏனைய
இரண்டு தரப்புக்களான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் இருந்துமரூபவ்;
விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியிடமிருந்தும் வரவேண்டி இருந்தது. இந்த இரண்டு
தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்தால் 13 வது திருத்தத்திற்கு எதிரான
கருத்துக்கள் பலமாக வந்து விடலாம் எனக் கருதியே தனித்தனியான சந்திப்புக்களை
வெளியுறவுச் செயலர் தவிர்த்திருக்கலாம்.
இத்தனைக்கும் மலையகத் தரப்பில் செயற்படும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸரூபவ்;
தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய இரண்டையும் தனித்தனியாகவே
சந்தித்திருந்தார். தமிழத்தேசியக் கூட்டமைப்பிற்கும் சமனாக தனியாக தங்களுக்கு
அழைப்பு விடுக்கவில்லை என்பதால் விக்கினேஸ்வரன் சந்திப்பில் கலந்து
கொள்ளவில்லை ஆனாலும் அவரது கூட்டணியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிவாஜிலிங்கமும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இவ்விருவரும் கூட ஒருங்கிணைந்த
அடிப்படையில் செயற்படவில்லை மாறாக தனித்தனியாகவே செயற்பட்டனர்.
சிவாஜிலிங்கம் சில மகஜர்களைக் கையளித்திருந்தார். இவ் மகஜர் விக்கினேஸ்வரனின்
கூட்டணியுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை
மணிவண்ணன் யாழ்மாநகர மேஜர் என்ற வகையில் தனியாகக் கலந்து கொண்ட
சிவில் தரப்பினர் என்ற வகையில் யாழ்பல்கலைக்கழக துணைவேந்தாரூபவ்; யாழ் வர்த்தக
சங்கத் தலைவர் கருத்துருவாக்கிகளான பேராசிரியர் கணேசலிங்கம் ரூபவ் நிலாந்தன்
ஆகியோர் உட்பட வேறும் பலர் கலந்து கொண்டனர். தமிழத்தேசிய மக்கள்
முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் கலந்து கொண்டார். அவருக்கு சற்று
அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வெளியுறவுச் செயலரின் ஆசனத்துக்குப்
பக்கத்தில் அவருக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. மறு பக்கத்தில் யாழ் பல்கலைக்கழக
உப வேந்தருக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. கஜேந்திரகுமாருக்கு வழங்கப்பட்ட
முக்கியத்துவம் சொன்ன செய்தி “உங்களிலும் கவனம் செலுத்துகின்றோம்” என்பதாக
இருக்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் போல
தங்களுக்கு வழங்கப்பட்டவில்லை என கஜேந்திரகுமார் நினைக்கக் கூடாது என வெளியுறவுச்
செயலர் கருதியிருக்கலாம். எல்லாவற்றிலும் சுயமரியாதை பார்க்கும்
கஜேந்திரகுமார் இதில் ஏன் கோட்டை விட்டார் என்பது வியப்பைத் தருகின்றது.
தனியான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதற்காக விக்கினேஸ்வரன்
தவிர்த்ததைப்போல் கஜேந்திரகுமாரும் சந்திப்பை தவிர்த்திருந்திருந்தால் இது
வலிமையான செய்தியை இந்தியத்தரப்பிற்கு சொன்னதாக அமைந்திருக்கும்
கஜேந்திரகுமார் தான் என்ன கருத்துக்களைக் கூறியிருந்தேன் என்பதை
ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக 3
கருத்துக்களைக் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். அதில் முதலாவது தமிழர்
பிரச்சினைகளை ஒற்றையாட்சியின் தீர்வு வழங்கக் கூடிய எந்த ஒரு
பொறிமுறையையும் இந்தியா முன்வைக்கக் கூடாது என கூறியதாகக் குறிப்பிட்டார்.
இரண்டாவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய
நடவடிக்கைகள் வட கிழக்குப் பகுதியில் முன்னெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க
மாட்டோம் எனக் கூறியிருந்தார். மூன்றாவதாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில்
இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை
வரவேற்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியாக
நேரடியாகப் பலப்படுத்தக் கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம் எனக் கூறியிருந்தார்.
வெறுமனே உட்கட்டமைப்பு வசதிகளை மாத்திரம்
விரிவுபடுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தும் பட்சத்தில் அபிவிருத்தி என்ற விடயம்
தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்படக் கூடிய வாய்ப்புக்ளை உருவாக்கும்
எனவும் கூறியிருந்தார். எந்த ஒரு பொறிமுறையையும் யோசனையையும் இந்தியா
முன்வைக்கக் கூடாது என மறைமுகமாகக் கூறிய போதும் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 வது
திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் நேரடியாகக் கூறவில்லை.
இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற
ரூடவ்ழநாட்டின் ஆசிரிய தலையங்கத்திலும் வந்திருக்கின்றது. எல்லா இடங்களிலும்
நேரடியாகவே தனது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைக்கின்ற கஜேந்திரகுமார்
இதில் ஏன் அவ்வாறு முன்வைக்கவில்லை.
இரண்டாவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்
கூடிய நடவடிக்கைகள் வட-கிழக்கில் இடம்பெறுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பது அவர்
தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற விடயம்தான். ஆனால் அதனைத் தடுக்கும் வகையில்
அவரது கட்சி எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது எதிர்காலத்தில் மேற்கொள்ள
இருக்கிறது என்பது பற்றி தெளிவாக எதனையும் கூறவில்லை. வடக்குரூபவ் கிழக்கில்
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனாவில் பல நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடலட்டைப் பண்ணை தொடக்கம் தீவுப்பகுதிகளில்
காற்றாலை மின்சாரம்வரை பல செயற்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
மூன்றாவதாக அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அவர் கூறிய விடயங்களைப்
பொறுத்தவரை போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியில்
பலப்படுத்துவது பற்றி அவர் கூறிய கருத்துக்கள் வரவேற்கத் தக்கதே கட்டமைப்புசார்
அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் ஆக்கிரமிப்புத் திட்டங்கள் பற்றி
அவர் கூறியவையும் வரவேற்கத் தக்கதே.
இந்தக் கட்டமைப்புசார் அபிவிருத்தித் திட்டகள் பற்றிய உதாரணங்களைக்
குறிப்பிட்டு கருத்துக்களைக் கூறியிருந்தால் விடயங்கள் இன்னமும் தெளிவாக
வந்திருக்கும். இதைவிட அபிவிருத்தித் திட்டங்கள் வட-கிழக்கில்
மேற்கொள்ளப்படுகின்ற போது மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்
மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருக்கலாம். அபிவிருத்தித்
திட்டங்களோடு தமிழ் உள்;ராட்சிச் சபைகளை இணைக்க வேண்டும் என்ற கருத்தையும்
முன்வைத்திருக்கலாம். தமிழ் மக்களைப் பங்காளி ஆக்காது சிங்கள அரசுடன் இணைந்துமட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழ் மக்களுக்கு ஆபத்துக்களைக்
கொண்டுவரலாம்.
சிவில் தரப்பிலிருந்து பேராசிரியர் கணேசலிங்கம் 13வது திருத்தம்
தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கப் போதுமானதல்ல எனவே அதற்கப்பாலான
தீர்வை நோக்கி இந்தியா செல்ல வேண்டும். இது தொடர்பாக இந்தியாவின்
நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதற்கு இந்திய வெளியுறவுச் செயலளர் கூறிய பதில் “தற்போது இந்தியாவின் நிலைப்பாடு 13வது
திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவது என்பதே எதிர்காலத்தில் நீங்கள் கூறிய
விடயங்களையும் இந்தியா கருத்தில் எடுக்கும”; என்பதாக இருந்தது.
சிவில் தரப்பில் வந்த அதிகாரிகள் நிவாரண கோரிக்கைகளையே
முன்வைத்தனர். அரசியல் கோரிக்கைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என
அவர்கள் கருதுகின்றார்களோ தெரியாது. மொத்தத்தில் பெருமளவிற்கு அரசியல்
நீக்கம் செய்யப்பட்ட சந்திப்பாகவே இச் சந்திப்பு முடிவடைந்திருக்கின்றது. தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புடனான தனியான சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர்
சம்பந்தன் 13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்; என்பதையே
பிரதானமாக வலியுறுத்தி வெளியுறவுச் செயலரை மகிழ்ச்சிப்படுத்தியிருந்தார்.
இது விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன்
முன்வைத்த இறுக்கமான கருத்துக்களைக் கூட வட-கிழக்கு தமிழ்த்தரப்பினர் முன்வைக்கவில்லை.
அவர் ஒரு தென்னிலங்கை அரசியல்வாதி என்பதால் வட-கிழக்கு விவகாரம் பற்றி
அதிகம் பேச முடியாது. ஆனாலும் தென்னிலங்கையின் அரசியல் சூழலில்
நின்றுகொண்டு ஆணித்தரமாக கருத்துக்களை முன்வைத்திருந்தார். தமிழ்மொழி
அமுலாக்கம் 13வது திருத்தம் என்பவை பற்றிய அவரது கருத்துக்களுக்கு அப்பால்
சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மலையக மக்களை வெகுவாகப்
பலவீனப்படுத்திவிட்டது என்பதை நேரடியாகவே கூறியிருந்தார். அந்த ஒப்பந்தம்
இடம்பெற்றிருக்காவிட்டால் தென்னிலங்கயில் இருந்து 30 தமிழ்ப்
பிரதிநிதிகளைத் தெரிவுசெய்திருப்போம் எனவும் கூறியிருந்தார். மலையக
மக்களைப் பொறுத்தவரை சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் ஒரு இன அழிப்பு
நடவடிக்கையே!
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அடிப்படைப்பிரச்சினைரூபவ் இன அழிப்புக்கு
நீதிகோரும் பிரச்சினைரூபவ் ஆக்கிரமிப்புப் பிரச்சினை இயல்புநிலையைக்
கொண்டுவருதல் பிரச்சினைரூபவ் அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இது பற்றி இக் கட்டுரையாளர் முன்னரும்
கூறியிருக்கின்றார். இப் பிரச்சினைகளை வெவ்வோறு நபர்கள் தெளிவாக
முன்வைத்திருக்கலாம். இந்தியா விரும்பாவிட்டாலும் கூட இவற்றை முன்வைக்க வேண்டியது
தமிழ்த் தரப்பின் கடமை ஆகும். இவற்றில் அடிப்படைப் பிரச்சினை இன
அழிப்புக்கு நீதிகோரும் பிரச்சினை என்பவை தொடர்பாக இந்தியாவிடம்
தற்போதைக்கு பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் மீதி மூன்று
பிரச்சினைகள் தொடர்பாகவும் வலுவான அழுத்தங்களை தெளிவான திட்டங்களுடன்
ஒருங்கிணைந்து கூறியிருக்கலாம். ஆனால் அது பற்றி பெரிதாக பேசப்பட்டதாக
தெரியவில்லை.
சர்வதேச இராஜதந்திரிகளுடனான சந்திப்பு தமிழ் மக்களுக்கு அரிதாகவே
கிடைக்கும். அந்தச் சந்திப்புக்களை வலுவான திட்டங்களுடன் பயன்படுத்தியிருக்க
வேண்டும். இது நிகழாமை கவலைக்குரியதே!
இப்போது எழும்கேள்வி எதிர்காலத்திலாவது தமிழ்த்தரப்பு இந்த விடயத்தில்
கவனம் செலுத்துமா?