யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் சந்நிதியான் ஆசசிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது.
பஞ்ச புராணம் ஓதுதலுடன், ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனத்தினை ஏழாலை சிறி முருகன் அறநெறி பாடசாலை மாணவர்கள் வழங்கினர்.
காவடி ஆட்டம், மயிலாட்டம், நடனம் என்பவற்றை சிறி நல்லது முருகன் அறநெறி பாடசாலை மாணவர்கள் நிகழ்தினர்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற அதிபர் செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் தலமையில் சிறப்பு பட்டிமன்றம் இடம் பெற்றது.
தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தோடு தொடர்ந்து சேவையாற்றிய பலர் கௌரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து
அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி விரிவுரையாளர் சிதம்பரம் சிவமைந்தன் தலமையில் பண்ணிசைக் கச்சேரி இடம் பெற்றது.
இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், நலன்விரும்பிகள், என பலரும் கலந்துக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.