நல்லிணக்கச் செயற்பாடுகளை உள்ளகப் பொறிமுறையின் அடிப்படையில்
செயற்படுத்துவது தொடர்பாக புலம் பெயர் மக்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு
தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் வகிபாகம் தொடர்பான
உரையாடலை சகல தளங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய
அரசியலில் புலம்பெயர் மக்களின் முக்கியத்துவம் புலம் பெயர் மக்கள்
மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்பன பற்றி அந்த உரையாடல் கவனத்தைக்
குவித்துள்ளது.
இந்தக்கட்டுரையாளர் தனது சென்றவாரக் கட்டுரையில் புலம் பெயர் மக்களின்
முக்கியத்துவம் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். தமிழ்த்தேசிய
அரசியலை தக்க வைத்து பாதுகாத்தல்ரூபவ் புலம்பெயர் நாடுகளில் அரசியல் சமூகமாக
வளர்ச்சி பெறுதல்ரூபவ் உலகலாவிய வகையில் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தல்ரூபவ்
இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோருதல்ரூபவ் உலகெங்கும் பரந்து வாழும் தமிழக
வம்சாவழித் தமிழர்களுக்கும் தாயக மக்களுக்குமிடையே பாலமாக விளங்குதல்ரூபவ் புலம்
பெயர் மக்களின் பொருளாதார வலிமை என்பவற்றை முக்கியத்துவங்களாக
சுட்டிக்காட்டியிருக்கின்றார். இவற்றுடன் உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும்
தாயக மக்களுக்குமிடையே பாலமாக விளங்குவதையும் குறிப்பிடுதல் அவசியமானது.
இந்தக் கட்டுரை புலம் பெயர் மக்கள் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாக
மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஆய்வு செய்கின்றது. இதில் முதலாவது புலம்பெயர்
அமைப்புக்கள் தங்களுக்கிடையே ஒருங்கிணைந்த அரசியலைப் பின்பற்றுவதாகும்.
தங்களுக்கிடையே அவர்கள் ஜனநாயக ரீதியான உரையாடலை நடாத்தி ஒருங்கிணைவுக்கான
பொதுப்புள்ளியைக் கண்டுபிடித்து அதனை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை
மேற்கொள்ளுதல் வேண்டும்.
வலுவான ஐக்கிய முன்னணி ஒன்றின் மூலமே ஒருங்கிணைந்த அரசியலை
வெற்றிகரமாக முன்னெடுக்கலாம். இதற்கு அரசியல் நிலைப்பாட்டில் உறுதித்தன்மைரூபவ்
அதற்கான வழிவரைபடம்ரூபவ் சமபங்காளர் என்ற அந்தஸ்து அமைப்பப் பொறிமுறை
என்பன வலுவாக இருத்தல் அவசியமானதாகும். தேர்தல் அரசியலை மேற்கொள்ள வேண்டிய தேவை புலம்பெயர் மக்களுக்கு இல்லாதபடியால் மேற்கூறிய பண்புகளின்
அடிப்படையில் ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்புவது கடினமாக
இருக்கப்போவதில்லை. அரசியல் இலக்கு வழிவரை படம் என்பவற்றில் உடன்பாடு
கண்டறியப்பட்டு அதற்கான உடன்படிக்கை ஒன்றை வரைவது செயற்பாடுகளை
முன்னெடுப்பதில் ஆரோக்கியமான நிலையைக் கொண்டு வரும்.
தமிழ்த் தேசிய அரசியல் வெற்றியடைவதற்கு நிலத்திற்கும் புலத்திற்கும்
தமிழகத்திற்கும் இடையே ஒருங்கிணைந்த அரசியல் அவசியமானதாகும். எனவே புலம்
பெயர் நாடுகளில் உருவாக்கப்படுகின்ற ஒருங்கிணைந்த அரசியலை தாயகத்திற்கும்
தமிழகத்திற்கும் விஸ்தரிக்க வேண்டும். தாயகத்திற்கு விஸ்தரிக்கின்ற போது தாயக
மக்கள் எதிர்நோக்குகின்ற சட்டத் தடைகளை புலம் பெயர் மக்கள் கவனத்திலெடுப்பது
அவசியம். தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரான 6 வது திருத்தச் சட்டமும் தமிழீழ
விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட நிலையும் தாயக மக்களின் செயற்பாடுகளுக்கு
எல்லைகளை வகுத்துள்ளன. தாயக மக்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுக்க முடியாது.
அதே வேளை தமிழீழ விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதனால்
இதனை மையப்படுத்தியும் செயற்பட முடியாது.
எனவே புலம் பெயர் மக்கள் தாயகம் சந்திக்கின்ற சட்டத்தடைகளை கவனத்தில் எடுத்து
தமது அரசியல் நிலைப்பாடுகளையும் அமைப்புப் பொறிமுறையையும் வகுத்துக்
கொள்ளுதல் அவசியமானதாகும். நிலமும் புலமும் ஒருங்கிணைந்த அரசியலுக்குள்
வராவிட்டால் உலகம் தழுவிய வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது
கடினமாகவே இருக்கும்.
அரசியல் இலக்கு தொடர்பாக சுயநிர்ணய உரிமையுடைய சமஸ்டி என்பதை
முன்வைத்தால் நிலமும் புலமும் இணைந்து செயற்படக்கூடிய நிலை உருவாகும். அரசியல்
இலக்கு தொடர்பாக கொள்கை அடிப்படையில் தேச அங்கீகாரம்ரூபவ் இறைமை
அங்கீகாரம்ரூபவ் சுயநிர்ணய உரிமை அங்கீகாரம் சுயநிர்ணயமுடைய சமஸ்டி ஆட்சி
அங்கீகாரம் என்பவற்றை முன்வைக்கலாம். இக்கோட்பாட்டிற்கு அரசியல் யாப்பு
சட்ட வடிவம் கொடுக்கும் போது வடக்கு கிழக்கு இணைந்த அதிகார அலகு சுயநிர்ணயமுடைய
சுயாட்சி அதிகாரங்கள்ரூபவ் மத்திய அரசில் ஒரு தேசமாகப் பங்குபற்றுவதற்குரிய
பொறிமுறைரூபவ் சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றை முன்வைத்தல்
அவசியமானதாகும். மேற்கூறிய அரசியல் இலக்கினை அடைவதற்கான வழிவரைபடத்தைப் பொறுத்த வரை தமிழ் அரசியல் இலக்கிற்கான அரசியல் நியாயப்பாடுகளை புலமை ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் தொடுத்து தாயக மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அதனைப் பேசு பொருளாக்கல் ரூபவ் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்த தேசிய அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பதலரூபவ்; சேமிப்பு சக்திகளான
உலகத்தமிழர்களையும் ரூபவ் நட்பு சக்திகளான உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளையும்
இணைத்துக் கொள்ளுதல் ரூபவ் இலங்கைத்தீவை மையமாக முன்வைத்து செயற்படும் பூகோள
அரசியலில் பங்காளிகளாக மாறுதல்ரூபவ் சமூகமாற்ற அரசியலை முன்னெடுத்தல்ரூபவ்
சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச
பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்குதல் ரூபவ் மக்கள் பங்கேற்பு அரசியலை
தொடக்கிவைத்தல்; ரூபவ் அரசின் அதிகாரக் கட்டமைப்புக்கு சமாந்தரமாக தமிழர்களுக்கென
ஒரு அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குதல். கிழக்கைக் கையாள்வதற்கு பொருத்தமான
மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்து செயற்படுத்துதல் என்பன
உள்ளடங்கி இருத்தலை உறுதிப்படுத்துவது அவசியமானதாகும்
இரண்டாவது பணி புலம் பெயர் நாடுகளில் வாழும் புலம்பெயர் மக்கள் ஒரு
கட்டுறுதியான அரசியல் சமூகம் என்பதை மேலும் வலுப்படுத்திக் கொள்ளுதலாகும்.
கட்டுறுதியான அரசியல் சமூகம் என்பது புலம்பெயர் மக்கள் அரசியல் இலக்கிலும்
கொள்கையிலும் உறுதியான நிலையில் கூட்டாக நின்று கொண்டு தமக்கென அரசியல்
பிரதிநிதிகளை புலம்பெயர் நாடுகளில் இடம் பெறும் தேர்தல் மூலம் தெரிவு
செய்து அந்நாட்டின் அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஆற்றலைக் கொண்ட
சமூகமாகும். கட்டுறுதியான அரசியல் சமூகம் என்ற நிலையை அடைவதற்கு முதலில்
அச்சமூகம் ஒரு பண்பாட்டுச் சமூகமாக எழுச்சியடைய வேண்டும். புலம் பெயர் மக்கள்
மொழியையும் கலாச்சாரத்தையும் வலுவாகப் பேணுகின்ற போதே ஒரு பண்பாட்டுச்
சமூகமாக எழுச்சியடைய முடியும்.
புலம் பெயர் மக்களைப் பொறுத்தவரை ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில்
வாழ்கின்ற புலம் பெயர் மக்கள் பண்பாட்டுச் சமூகமாக எழுச்சியடைவதில்
பலவீனமான நிலை காணப்படுகின்றது. ஆங்கில மொழியை மட்டும் பேணுவதற்கு
புதிய தலைமுறை முற்படுவதே இதற்குக் காரணமாகும். இதனால் கனடாரூபவ் பிரித்தானியா
போன்ற நாடுகளில் தற்போது ஓரளவிற்கு அரசியல் சமூகமாக இருக்கின்ற
புலம்பெயர் மக்கள் இதனைத் தொடர்ந்தும் பேணுவார்களா? என்பதில் சந்தேகம்
ஏற்படத்தொடங்கியுள்ளது. இதற்கு மாறான நிலை ஆங்கிலம் பேசாத நாடுகளான ஜேர்மனி ரூபவ் ஒல்லாந்து ரூபவ் சுவிஸ்லாந்து டென்மார்க் நோர்வே போன்ற
நாடுகளில் நிலவுவது சற்று மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கின்றது. அங்கு
புதிய தலைமுறை தமிழ் மொழியை நன்றாக எழுதப்பேச தெரிந்திருப்பதோடு
பண்பாட்டுப்பேணுகையிலும் வலுவான அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர்.
தென்னாபிரிக்காவில் தமிழக வம்சாவழித்தமிழர்கள் மூன்றாவது பெரிய இனமாக
இருக்கின்றனர். கறுப்பின மக்களுக்கும் வெள்ளை இன மக்களுக்கும் அடுத்தபடியாக
எண்ணிக்கையில் அதிகமாகதமிழக வம்சாவழித் தமிழர்களே உள்ளனர். ஆனாலும்
அவர்கள் அங்கு ஒரு பண்பாட்டுச்சமூகமாக எழுச்சியடையவில்லை. இதனால் அரசியல்
சமூகமாகவும் வளரவில்லை. இந்த நிலைமை புலம் பெயர் மக்களுக்கும் வந்துவிடக் கூடாது.
மலேசியாவில் தமிழக வம்சாவழித் தமிழர்கள் சிறந்த பண்பாட்டுச் சமூகமாகவும்
அரசியல் சமூகமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளனர்.
புலம்பெயர் மக்கள் எண்ணிக்கையில் குறைந்தளவினரான வாழும் நாடுகளில்
கூட்டு அரசியல் சமூகமாக வாழ்வதில் அக்கறை கொள்வது நல்லது. பண்பாட்டுத் தளத்தில்
தமிழர்களாக வாழ்கின்ற அதேவேளை அரசியல் தளத்தில் கூட்டடையாளத்தைப் பேணலாம்.
இந்த கூட்டடையாளத்தினை அங்கு வாழும் ஏனைய புலம்பெயர் மக்களுடன் இணைந்து
உருவாக்கிக் கொள்வதே ஆரோக்கியமானது. நோர்வேயில் பாராளுமன்ற
உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஹம்சாயினி குணரத்தினம் பல்லின மக்கள்
வாழும் தொகுதியிலிருந்தே தெரிவு செய்யப்பட்டார் என்பதை இங்கு கவனத்தில்
கொள்வது நல்லது.
மூன்றாவது பணி புலம் பெயர் மக்கள் தாயகத்தில் நிலவும் கட்சி அரசியல்
முரண்பாடுகளுக்குள் மாட்டுப்படாமல் தமது பணிகளை முன்னெடுப்பதாகும். தாயகத்தில்
ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கு தடங்கலாக இருப்பது இங்குள்ள கட்சி
அரசியலும் ரூபவ் தேர்தல் அரசியலுமேயாகும். கட்சி அரசியலுனூடாக
வினைத்திறனுடன் தேச அரசியலை முன்னெடுக்க முடியாது. கட்சிகளின் பிரதான இலக்கு
தேர்தலும் அதன் வழி கிடைக்கும் பதவிகளும் தான். அவற்றின் அனைத்து நடவடிக்கைகளும்
அதனை மையப்படுத்தியே இருக்கும். தேச அரசியல் அவற்றிற்கு இரண்டாம்
பட்சமானதே! தாயகத்தில் தேச அரசியல் தேங்கி நிற்பதற்கு கட்சி அரசியலும் ரூபவ்
தேர்தல் அரசியலுமே ரூபவ் பிரதான காரணங்களாகும். புலம் பெயர் மக்களும்
அதற்குள் மாட்டுப்பட்டால் தமிழ்த்தேசிய அரசியல் மேலும் மேலும் தேங்கக்கூடிய
நிலையே ஏற்படும். நான்காவது தமிழ் மக்களுக்குக்கென ஒரு வெளிநாட்டுக் கொள்கையையும் அதனை நடைமுறையில் செயற்படுத்துவதற்கான ராஜதந்திர லொபியையும் உருவாக்குவதாகும்.
வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் உறவுகளைப் பேணுவதற்கு
அடிப்படையாக இருககின்ற கொள்கையாகும். தேசிய நலனே வெளிநாட்டுக்
கொள்கையின் அடிப்படையாக இருக்கும். இந்த வெளிநாட்டுக் கொள்கை நாடுகளுக்கு மட்டும்
அவசியமானதல்ல. விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களுக்கும் அவசியமானதே! இக்
கட்டுரையாளர் இதுபற்றி முன்னரும் கூறியிருக்கின்றார்.
துரதிஸ்ட வசமாக தமிழ்த் தரப்பில் இதற்கான அக்கறை மிகக் குறைவு. தமிழ்த்
தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு சென்ற பின்னரும்ரூபவ் இலங்கைத் தீவின்
அரசியலை தீர்மானிப்பதில் பூகோள அரசியல் முக்கியத்துவம் பெற்ற
நிலையிலும் இந்த அக்கறையீனம் கவலைக்குரியதே! தமிழ் அரசியல் சக்திகளின்
சர்வதேசம் தொடர்பான அணுகுமுறை பலவீனமாக இருப்பதற்கும் வல்லரசுகள் பகடைக்
காய்களாக தமிழ் மக்களை பயன்படுத்துவதற்கும் இதுவே காரணமாகும்.
எனவே இந்த குறைபாட்டை தீர்த்துக்கொள்ளும் ஆற்றல் புலம்பெயர்
மக்களுக்கே உண்டு. அதற்கான அறிவுத்துறை வளமும்ரூபவ் பொருளாதார வளமும்
புலம்பெயர் மக்களிடம் தான் உண்டு. எனவே புலம்பெயர் மக்கள் உடனடியாக
வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்குவதற்கும் அதற்கான இராஜ தந்திரிகளை
பயிற்சிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
ஐந்தாவது தமிழ் மக்களுக்கென பொருளாதாரக் கொள்கை ஒன்றை உருவாக்குவதாகும்.
இது மிகவும் அவசியமானது. தாயகத்தில் வாழ்கின்ற பலர் அபிவிருத்தி மாயையில்
சிக்குப்பட்டுள்ளனர். இன்று சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் அபிவிருத்தி
நடவடிக்கைகள் ஆக்கிரமிப்புக் கருவிகளாக இருப்பதனை இங்கு பலர் கவனிப்பதில்லை.
தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வு வரும் வரை தமிழத் தேசிய அரசியல்
பொருளாதாரத்திலேயே கவனம் செலுத்த முடியும். அதாவது தமிழ் மக்களின் அரசியல்
இலக்கிற்கு பங்களிப்புச் செய்கின்ற பொருளாதாரமே அதுவாகும். சிறிய
சிறிய தொழிற்சாலைகளை தமிழ் மக்களின் முதலீடுகளுடன் ஆரம்பிப்பது
ஆரோக்கியமானதாகும். பாரிய முதலீட்டுடன் கூடிய தொழில்களை புலம்பெயர்
நாடுகளில் கூட்டாகவோரூபவ் தனியாகவோ உருவாக்குவது தமிழ் மக்களின் பொருளாதார
பலத்தை சர்வதேச ரீதியாக உயர்த்துவதற்கு வழிவகுப்பதாக இருக்கும்.
இவையெல்லாவற்றிற்கும் முதல் நிபந்தனை தமிழ் மக்களுக்கென ஒரு
பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதே!
ஆறாவது தமிழ் மக்களுக்கென தமிழர் நிதியம் ஒன்றினை உலகளாவிய வகையில்
உருவாக்குவதாகும். இது சேர்க்கப்படுகின்ற நிதியினை மையப்படுத்துவதற்கும்
உதவிகரமானதாக இருக்கும். யூத அரசியலின் தந்தையாக கருதப்படுகின்ற
தியோடர் ர்சல் முதலில் உருவாக்கியது யூதநிதியத்தைத்தான். இந்த நிதியத்தை
உருவாக்கும்போது கடந்தகாலத் தவறுகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது மிகவும்
அவசியம். புலம்பெயர் மக்கள் மத்தியில் பொது நிதியைக் கையாள்வதில்
முறைகேடுகள் இடம்பெற்றதாக தற்போதும் பேசப்படுகின்றது.
இவற்றை விட தமிழ் மக்களுக்கென புலம்பெயர் நாடுகளில் அங்குள்ள பிரதான
மொழிகளில் பத்திரிகைகளை நடாத்துதல்ரூபவ் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை
உள்ளடக்கிய அரும்பொருட் காட்சியகம் ஒன்றை உருவாக்குதல்ரூபவ் போன்ற பணிகளும்
புலம்பெயர் மக்களுக்காக காத்துக்கிடக்கின்றன.
தமிழ்த் தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் வகிபங்கு
உன்னதமானது. இதன் முக்கியத்துவத்தை தாயக மக்களும்ரூபவ் புலம்பெயர் மக்களும் தர்க்க
h|Pதியாக புரிந்துகொண்டு செயற்பட்டால் தமிழ்த் தேசிய அரசியலில் உலகமே
எதிர்பார்க்காத பாய்ச்சலை நடாத்திக் காட்டலாம்.