
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம் பெற்றுள்ளது.







காலை முதல் ஆரம்பமான திருவிழவாவில் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டு வழிபட்டதுடன் பல பக்தர்கள் காவடி, தூக்குக் காவடி, பாற்செம்பு, கரகம் என்பன ஆடி தமது நேற்றிக் கடன்களை மேற்கொண்டனர்.








குறிப்பாக சிறுமிகள் சிறுவர்களின் கரகாட்டம் பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இத் திருவிழாவில் மந்திகையை சூழவுள்ள நூறு்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இதே வேளை மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலமையில் ஈடுபட்டிருந்தனர்.