
இலங்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறைந்த அல்லது முற்றிலும் இல்லாத அரச நிர்வாகத்தை உருவாக்குவதே தமது ஊழல் எதிர்ப்பு சக்தி என்ற அமைப்பின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்கதியின் தலைமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்பு சக்தி என்ற அடிப்படையில் நாட்டில் பாதுகாப்பான அரச நிர்வாகத்தை தோற்றுவிப்பது தொடர்பாக அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து வருகின்றோம்.
பெண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் ஊடாக சர்வதேச ரீதியாக ஊழல் மற்றும் மோசடிகளால் ஏழை மக்களின் பொருளாதாரத்தை சூறையாடும் ஆட்சியாளர்கள், ஜனாதிபதிகள் அமைச்சர்கள், வர்த்தகர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
குறித்த அமைப்பு யாருக்கும் பாரபட்சமின்றி செயற்படும் சுயாதீன நிறுவனமாக உள்ளது. அவர்களுக்கு பல துறைகளில் இருந்தும், ஆய்வுகளின் ஊடாகவும் கிடைக்கப்பெறும் தரவுகளின் ஊடாக ஊழல் மற்றும் மோசடிகள் பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் ஒரு மாதத்திற்குள் மோசடிகள் குறித்து ஆராய்ந்து பெண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் இலங்கையர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றமை தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணித்திருந்தார். ஜனாதிபதி இதேபோன்ற ஒரு வேலையை கடந்த ஜனவரி மாதமும் செய்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்ற ஒன்றை நியமி;த்தார். அதனை அனைவரும் மனநலம் குன்றிய பூனை ஆணைக்குழு என்றே வர்ணித்தார்கள். அந்த ஆணைக்குழுவின் தலைவரின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக அவரை அனைவரும் மனநலம் குன்றிய பூனை என்றே கூறுவார்கள்.
தமக்கு உடந்தையாக செயற்பட்ட அனைவரையும் பாதுகாக்கும் விதமாகவே அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் மனநலம் குன்றிய பூனை ஆணைக்குழு தொடர்பாகவும் பெண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில் சுட்டிகாப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.