
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் 31/05/2024 நேற்று வெள்ளிக்கிமை யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. 













யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜீ.நடேசன் அவர்களது திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மூத்தஊடகவியாளர் சி.தில்லைநாதன் ஏற்றிவைக்க மலர் மாலையினை ஊடக இல்லத்தலைவர் மகாலிங்கம் அணிவித்தார்.
தொடர்ந்து வடமராட்சி ஊடக இல்லத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.