
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம மாதாந்த ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 317 வது இதழ் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் திருமுன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் திரு. சிவநாதன் தலமையில் நேற்று வெள்ளிக்கிழமை 31/05/2024 காலை 10:45 மணியளவில் திருமுறை ஓதலுடன் ஆரம்பமானது.






தொடர்ந்து வெளியீட்டு உரையினை ஓய்வு பெற்ற கிராம சேவகர் சிற்சபேசன் நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை
யாழ்ப்பாணம் கல்லூரி ஆசிரியரும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினருமான துரை கணேசமூர்த்தி நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பு பிரதிகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, மதிப்பீட்டு உரை நிகழ்த்திய சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் துரை கணேசமூர்த்தி ஆகியோர் வழங்கி வைத்தனர்.


அதனை தொடர்பு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள என்பு மச்சை சிகிச்சை பிரிவிற்க்கான மருத்துகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ரூபா 525000/- நிதி போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்டதுடன் சுண்ணாகம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மலசல கூடம் அமைப்பதற்க்காக இரண்டாம் கட்ட நிதியாக ரூபா 25000/- வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அடியார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.