
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (31.05.2004) 5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது.






இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.