
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 13 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலை ஒன்று அமைத்து நேற்றைய தினம் 02/06/2024 சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வவுனியா வெங்கல சட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தின் சிறி சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறி சித்திவிநாயகர் அறநெறி பள்ளி மாணவர்கள் பள்ளி தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழவாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.
















தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் சிறி சித்தி விநாயகர் அறநெறி பள்ளிக் கட்டிட கல்வெட்டினை திரை நீக்கம் செய்து வைத்து கட்டிடத்தையும் நாடா வெட்டி திறந்துவைத்தார்.
அதனை தொடர்ந்து கட்டிடத்தில் பால் காச்சப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் மங்கல சுடர்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், வெங்கல செட்டிக்குளம் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், வெங்கல செட்டி குளம் பிரதேச செயலகத்தை சேர்ந்த மு.சுயேந்திரன், உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்பு உரை இடம் பெற்றதை தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சி கள் இடம் பெற்றன.
இந்மி இந் நகழ்வில் சந்நிதியன் ஆச்சிரம முதல்வர் கலாநிதி. மோகனதாஸ் சுவாமிகள், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், வெங்கல செட்டிக்குளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தை சேர்ந்த ம.சுஜேந்திரன், கணேசபுரம் கிராம அமைப்புக்களின் நிர்வாகிகள், அறநெறி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்