
செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடாத்தப்பட்ட இளை தலைமுறை ஆற்றளாளர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்குழமை ,2/06/2024 காலை 9.00 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தீல் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெற்றது.







இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைககுழு உறுப்பினர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வைத்தியத் துறைக்கு அரும்பணியாற்றிய இதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்களுக்கும் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் ஹரிகரன் தன்வந்திற்கும் இளைய தலைமுறை ஆற்றளாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.