
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.



குறித்த விபத்து இன்று (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பயணிப்பதால், இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.