
வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதல் நிலையையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற வஜீனா பாலகிருஷ்ணன் அவர்களுக்கான கௌரவிப்பு நேற்றையதினம் சமுர்த்தி வங்கியால் வழங்கப்பட்டது.






குறித்த மாணவி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சாந்தை என்ற கிராமத்தில் இருந்து இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி கல்வி கற்பதற்கு அவரது வீட்டில் ஒரு மேசை கூட இல்லாத நிலையில் வெற்றுத் தரையில் இருந்து கல்வி கற்றே இந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார்.
அவரது இந்த சாதனை அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுவதுடன், பெற்றோருக்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமையை சேர்த்துள்ளது. இந்நிலையில் குறித்த மாணவிக்கு இன்றையதினம் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.