
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்றைய தினம் காலை 10:45 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது.
பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் கருட புராணம் காட்டும் வாழ்வு எனும் ஆண்மீக சொற்பொழிவை ஓய்வு பெற்ற வலிகாமம் கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் தேவமனோகரன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து கெருடாவில் பகுதியை சேர்ந்த ஆலயம் ஒன்றிற்க்கு அதன் கட்டுமான பணிக்கு ரூபா 50000/- நிதியும் வழங்கப்பட்டது.





இதில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்