
சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களது 117 வது நினைவு விழா நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் மேலைப்புலோலியிலுள்ள சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாலயத்தில் அமைக்கப்பட்ட சதாவதானி அரங்கில் சதாவதானி கதிரவேற்பிள்ளை சன சமூக நிலைய தலைவர் அ.ஜெயநிமலன் தலமையில் சிறிலசிறி சோமசுந்தர ஞான தேசிகர் முன்னிலையில் இடம் பெறறது.








இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா அரங்கிற்க்கு அழைத்துவரப்பட்டு அங்கு சதாவதானி நினைவு சிலைக்கு பிரதம விருந்தினர் சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் அணிவித்ததை தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டது. மங்கல சுடர்களை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற் சொல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பருத்தித்துறை போலீஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி Chandra, இளைப்பாறிய மதுவரி ஆணையாளர் நா.சோதிநாதன்,
அகில இலங்கை இளங்கோ கழக அமைப்பாளர் பரா றதீஸ் உட்பட பலரும் ஏற்றியதை தொடர்ந்து வரவேற்பு இறைவணக்கம், தமிழ் தாய் வாழ்த்து என்பன இடம் பெற்றதை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது.







தொடர்ந்து மாணவர்களிடையே ஐந்து பிரிவுகளின் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களது பேச்சுக்கள் அரங்கில் இடம் பெற்றதை தொடர்ந்து தலமை உரையை சதாவதானி சனசமூக நிலைய தலைவர் அ.ஜெயநிமலன் தலமை நிகழ்த்தினார்.
சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களது 117 நினைவில் அவதான போட்டி, பேச்சுப் போட்டி, பண்ணிசைப் போட்டி உட்பட பல போட்டிகள் நடாத்தப்பட்டன. இதில் 830 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் 200 பேருக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கிவைத்தனர்.
இதில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், பெற்றோர்கள், மேலைப்புலோலி மக்கள், அரச அதிகாரிகள் பருத்தித்துறை போலீஸார், உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1948 சதாவதானி சனசமூக நிலையம் உருவாக்கப்பட்டமை குறிப்பிட தக்கது.