முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று ஞாயிற்று கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வானது மல்லாவி ஆதார வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில்
3,367,000 செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மல்லாவி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் B.H.S. தேஷாஞ்ஜலி மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரம்மா.R. தங்கராசா ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கையளிப்பு நிகழ்வில் செந்தில் குமரன் நிவாரண நிதிய பொறுப்பாளர் வழங்கி வைத்தார்
மேலும் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன,சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.M.உமாஷங்கர்
செந்தில்குமரன் நிவாரண நிறுவன ஸ்தாபகர் திரு.டி.செந்தில்குமரன்
ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்
நிகழ்வில் முன்னைநாள் மல்லாவி வைத்திய அதிகாரிகள், மாவட்ட வைத்தியர்கள் , தாதிய உததியோகத்தர்கள், பணியாளர்கள் சமூக சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்