
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி க்கு இலங்கையின் ஜனநாயக போராளிகள் கட்சி தமது வாழ்த்திக்களை தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவமும் வருமாறு.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லமை கொண்ட பாரத தேசத்தின் பிரதமராக திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக ஜனநாயக வழிமுறைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்பதை மிகவும் பெருமையுடன் ஈழத்தமிழர்களின் சார்பில் ஜனநாயக போராளிகள் கட்சி வரவேற்று வாழ்த்துகின்றோம்.


கடந்த காலங்களில்
திரு நரேந்திர மோடி அவர்கள் முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஈழத்தமிழர்களை வந்து சந்தித்திருந்தார் என்பதை நினைவுகூருகின்ற இந்த வேளையில் ஈழத்தமிழர்களின் அரசியல் ரீதியான பிரச்சனையை தீர்க்க தீர்க்கமான ஒர் முடிவை விரைந்து எடுப்பார் என்று நாம் ஆழமாக நம்புகின்றோம். ஈழத்தமிழராகிய நாங்கள் இந்தியாவின் நீண்டகால கலை பண்பாட்டு தொடர்ச்சியான உறவை கொண்டவர்களாக இருப்பதை பெருமையுடன் நினைவில் கொள்கின்றோம் சமூக சமயப் பண்பாட்டுத் தொடர்புள்ள மக்களான ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இந்திய அரசுடன் ஒன்றிணைந்து பயணிக்க ஆர்வமுடையவர்களாக இருக்கின்றோம்.
இந்தியப் பிரதமராக மூன்றாவது தடவையாக பொறுப்போற்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமருடன் இணைந்து இந்துசமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களாகிய நாம் இருப்போம் என்ற செய்தியையும் இந்திய அரசிற்கு எடுத்துக் கூறுகின்றோம்.
சி.வேந்தன்
தலைவர்
ஜனநாயகபோராளிகள்கட்சி