
வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை திருமுக ஆண்டவர் ஆலயத்தை புதிதாக திறந்துவைத்து பெருவிழா திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஜானப்பிரகாசம் ஆண்டகையால் கடந்த 08.06.2024 ஒப்புக் கொடுக்கப்பட்டது.





கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 6.30 ஆரம்பமான பெருவிழா திருப்பலியை யாழ் ஆயர் ஒப்புக் கொடுத்தார்
பெருவிழா திருப்பலியை தொடர்ந்து கட்டைக்காடு பங்குமக்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு,மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி ஆயர் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்
குறித்த பெருவிழா திருப்பலியில் அருட்தந்தையினர்,பங்குமக்கள், இந்து மத சகோதரர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.