
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் 12/06/2024 புதன்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கியிருந்தார்.





பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
உடனே அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்பு பிரிவினர் ஊடகவியலாளர்களின் கேமராவினை கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.