
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக வீதிகளிலும் மதில் சுவர்களிலும் ஓவியம் வரைந்த இளைஞர்,யுவதிகளுக்கு இன்று நாட்டில் வாழ்வதனை வெறுக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக குருணாகல் கொழும்பு உள்ளிட்ட உள்ளிட்ட குடிவரவு குடியகழ்வு திணைக்கள காரியாலயங்களில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாய் அதிகளவில் அச்சிடுவதனால் அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்படும் மக்கள் எவ்வளவு தொகை ரூபாய்களில் உழைத்தாலும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சிரமங்கள் ஏற்படும் என அ வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்றி இளைஞர்,யுவதிகள் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு பெற்றுக்கொள்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.