
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய கிருசாந் எனும் இளம் மருத்துவர் ஆவார்.
அவர் தங்கியிருந்த விடுதி பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி கதவை உடைத்து உள்ளே சென்றபோது குறித்த மருத்துவர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை போலீசார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்