
சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திருமுன்னிலையில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் தலமையில் பஞ்ச புராண ஓதுதலுடன் நேற்று வெள்ளிக்கிழமை 14/06/2024 ஆரம்பமானது.



அதனை தொடர்ந்து திருமதி அபிராமி சுதன் அவர்களின் இறை இசைக் கச்சேரி இடம் பெற்றது. இதில் அணி சேர் கலைஞர்களாக ஆர்மோனியம் திரு.செல்வச்சந்திரன், மிருதங்கம் ரமணன் ஐயர், தபேலா மகேந்திரப்பிரபா ஆகியோர் இணைந்திருந்தனர்.


இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதே வேளை கடந்த 11/06/ 2024 அன்று சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கு மட்டக்களப்பு – கல்லடியில் பேச்சியம்மன் ஆலயத்தில்,
குளர்பானம் உள்ளடங்கலாக விஸ்கற் வகைகள் என்பன வழங்கப்பட்டன.






மேலும் பண்டாரவளை – சென்ஜேம்ஸ் தோட்டம், மத்திய பிரிவு, ஆலி எல முத்துமாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவிற்க்காக ஆலய நிர்வாகத்திடம் ரூபா 50,000 நிதி வழங்கப்பட்டது.
அத்துடன் நேற்று முன்தினம் புதன்கிழமை 12/06/2024
புத்தளம் சேனைக் குடியிருப்பு, பல்லின கிராம மக்களுக்குமான இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் ஒன்றும் நடாத்தப்பட்டது.
இதில் 86 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.