
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் நேற்று புதன்கிழமை 19/06/2024 கைது செய்யப்பட்டுள்ளார்.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை சுன்னாகம் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு இலட்சம் மில்லிலீட்டர் கோடா மற்றும் ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்பு என்பனவும் இதன்போது மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.