யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர்கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 19/06/2024 பிற்பகல் 6:00 மணியளவில் நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மங்கள இசை முழங்க மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் PSM சார்ல்ஸ், யாழ் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் ஆதித்தன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன், கரவெட்டி சுகாதார வைத்திய ஆதிகாரி மருத்துவ கலாநிதி செந்தூரன், உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து வரவேற்பு உரை, தலமை உரை என்பன இடம் பெற்றன. அதனை தொடர்நது வாழ்த்திரைகளை வடக்கு மாகாண ஆளுநர் PSM சார்ள்ஸ், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி செந்தூரன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம தமிழ்துறை பேராசிரியர் சிவலிங்கராசா, உட்பட பலரும் நிகழ்தியதை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக நெல்லியடியில் வணிகத்தில் ஈடுபடுவோர் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிப்புக்களை நிகழ்வினை பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து சிவபூமி அறக்கட்டளை தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு பொதுப்பணி பூபதி எனும் உயர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்து கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன், யாழின் பிரபல தொழிலதிபர் நாகரத்தினம், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் ஆதித்தன், ஆகியோருக்கும் அவர்களது அளப்பரிய சேவைக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான விருதுகளையும் வடக்கு மாகாண ஆளுநர் PSM சார்ளஸ் வழங்கிவைத்தார். தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நெல்லியடி வணிகர் கழக உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் Psm சார்ள்ஸ், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், கரவெட்டி பிரதேச சபை செயலாளர், நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், நரம்பியல் வைத்திய நிபுணர் ஆதித்தன், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி செந்தூரன், தமிழ் துறை பேராசிரியர் சிவலிங்கராசா, மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன, வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, நெல்லியடி வணிகர் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.